« on: May 01, 2016, 11:59:42 PM »
உருளைக்கிழங்கு தோசை
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து தோலுரித்தது)
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் தோரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் மைதா மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், உருளைக்கிழங்கு தோசை ரெடி!!!
« Last Edit: May 02, 2016, 12:01:13 AM by MysteRy »

Logged