மிக அழகான கவிதை... அருமையான வரிகள் தோழி. கருத்தாளம் யோசிக்க வைக்கிறது. கவிஞர் கந்தர்வன் அவர்களின் "இரண்டாவது ஷிப்ட்" கதையில் வரும் கவிதை வரிகள்
"நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை,
ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை" என்பதைப் போல
அலுவலகம் செல்லும் திருமணமான நடுத்தர வர்க்கத்து பெண்ணின் ஒரு நாளை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். அதுவும், சென்னை தேனாம்பேட்டையில் வேலை செல்லும் ஒரு பெண்ணின் மனதை பதிவிட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள். உண்மைதான் வேலைக்கு செல்லும் பெண்களின் இரவு உறக்கம் அவர்களின் பணிச்சுமையினால் மன அழுத்தம் காரணமாக மணி பனிரெண்டு இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.
தோழி MysteRy கவிதாயினி MysteRy யாக பரிமானம் அடைந்ததிற்கு வாழ்த்துக்கள். அவ்வப்போது உங்கள் புதிய கவிதையைப் படிப்பதில் மகிழ்ச்சி!! உங்கள் கவித் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...