Author Topic: ~ சுண்டைக்காய் வற்றல் குழம்பு ~  (Read 380 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227463
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சுண்டைக்காய் வற்றல் குழம்பு



தேவையான பொருட்கள்:-

புளி -பெரிய எலுமிச்சம்பழ அளவு
பெருங்காயம் -1/2 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 3
வெந்தயம் : 1 ஸ்பூன்
கறிவேப்பிலை -2 கொத்து
நல்லெண்ணெய் – தேவையான அளவு
சாம்பார் பொடி : 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சுண்டைக்காய் வற்றல் – தேவையான அளவு.

செய்முறை:-

முதலில் புளியை ஊற வைத்துக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பெருங்காயத்தைப் பொறித்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு சுண்டைக்காய் வற்றலை வறுத்து எண்ணெயில் போட்டு பொறித்தெடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
பின்னர் கடுகை வெடிக்க விட்டு, துவரம்பருப்பு, வெந்தயம், மிளகாய்த் துண்டுகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு ஒவ்வொன்றாக நன்கு வறுக்க வேண்டும். லேசாகப் பொன் நிறம் வந்தவுடன் சாம்பார் பொடியைப் போட்டு மேலும் வறுக்கவும்.
இப்பொழுது கரைத்த புளித் தண்ணீரை அதில் விடவும். வறுத்து வைத்துள்ள சுண்டைக்காய் வற்றலையும் அதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போடவும். பெருங்காயத்தைச் சேர்த்து 6 கொதிக்க விடவும். கொதித்ததும் ஒரு ஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்