Author Topic: ~ செட்­டி­நாடு எலும்பு குழம்பு ~  (Read 410 times)

Offline MysteRy

செட்­டி­நாடு எலும்பு குழம்பு



தேவையான பொருட்கள்:

எலும்­புக்கு
ஆட்­டி­றைச்சி எலும்பு –- 500 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – –1 தே.க
பெரிய வெங்­காயம் -– 1
உப்பு, மஞ்சள் தூள் –- 1 தே.க
நீர் – – 1 கப்

தக்­காளி கிரே­விக்கு…
வெங்­காயம் –- 2
பச்சை மிளகாய் –- 3
இஞ்சி பூண்டு விழுது – – 2 தே.க
உப்பு
மஞ்சள் தூள் – –1 தே.க
மிளகாய் தூள் – –1 தே.க
மல்லி தூள் –- 1 தே.க
கரம் மசாலா தூள் –- 1 தே.க
தேங்காய் – – ½ கப்
தக்­காளி –- 3
உரு­ளைக்­கி­ழங்கு –- 2
முருங்­கைக்காய் –- 1
கொத்­த­மல்லி – சில இலைகள்
தாளிக்க…
எண்ணெய் –- ¼ கப்
பட்டை- – 3 துண்டு
பெருஞ்­சீ­ரகம் விதைகள் – –1 தே.க
சீரகம் – –1 தே.க
ஏலக்காய் –- 5
கராம்பு- – 5
வாசனை இலைகள்

செய்முறை:

எலும்பு வேக­வைக்க….
சுத்தம் செய்து வைத்­துள்ள எலும்­புடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்­கப்­பட்ட 1 பெரிய வெங்­காயம், மஞ்சள், உப்பு சேர்த்து போது­மான அளவு தண்ணீர் கலந்து குக்­கரில் மூடிவைத்து வேக­வி­டவும்.
பின்னர் துரு­விய தேங்­காயை மையாக அரைத்து வைக்­கவும்..
தக்­காளி கிரே­விக்கு….
பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டை, வாசனை இலை, கரு­வேப்­பிலை, பெருஞ்­சீ­ரகம் ஆகி­ய­வற்றை சேர்த்து கிள­றி­யதும் பச்சை மிளகாய், வெங்­காயம், சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பொன்­னி­ற­மாக வதக்­கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி தக்­காளி சேர்த்து கிளறி ஒரு விசில் வரும் வரை மூடி வைத்­து­வி­டவும்.
கிரேவி பதத்­திற்கு வந்­ததும் வத்தல் பொடி, மல்லி தூள் சேர்த்து கிளறி அத­னுடன் கரம் மசா­லா­வையும் சேர்க்­கவும்.
பின்னர் முருங்­கைக்காய், உரு­ளைக்­கி­ழங்கு ஆகி­ய­வற்றை தக்­காளி கிரே­வி­யுடன் கலந்து அரைத்து வைத்­துள்ள தேங்காய், வேக­வைத்த எலும்பு கல­வையும் சேர்த்து கிளறி 25 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு எலும்பு குழம்பு ரெடி.