Author Topic: ~ மேத்தி சிக்கன் மசாலா ~  (Read 391 times)

Offline MysteRy

~ மேத்தி சிக்கன் மசாலா ~
« on: April 24, 2016, 08:10:54 AM »
மேத்தி சிக்கன் மசாலா

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2  கிலோ
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மேத்தி தூள்(எவரெஸ்ட் சுகரி மேத்தி)  – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் –  2  தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 4  தேக்கரண்டி
கரம்  மசாலா – 1/2  தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம்  –  2
தக்காளி – 2
தேங்காய் – 1 /2  மூடி
கொத்தமல்லி தழை – சிறிது
கடுகு – 1 /2  தேக்கரண்டி



செய்முறை

மஞ்சள் தூளை சிக்கனில் போட்டு கலந்து வைக்கவும்.
தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி  போட்டு வதக்கவும்.
பின் மேலே கொடுத்துள்ள தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
சிக்கன் , உப்பு சேர்த்து வதக்கி , தேவையான அளவு நீர் ஊற்றி வேக விடவும்.
முக்கால் பாகம் வெந்தவுடன்  தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
இறக்குவதற்கு முன்பாக மேத்தியை பொடி செய்து போட்டு 2  நிமிடங்கள் விட்டு இறக்கவும்.

குறிப்பு

மேத்தி சிக்கன் சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்