Author Topic: ~ நாட்டுக் கோழி மிளகு சாறு ~  (Read 592 times)

Offline MysteRy

நாட்டுக் கோழி மிளகு சாறு

தேவையானவை

எலும்புகளோடு கூடிய நாட்டுக் கோழி கறி- 1/4 கிலோ
சிறிய வெங்காயம் -8
மிளகு- 2 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
இஞ்சி -சிறு துண்டு
பூண்டு- 6 பற்கள்
நாட்டுத் தக்காளி -1
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கல் உப்பு – ருசிக்கேற்ப
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடியளவு



செய்முறை

கறியை சுத்தமாக கழுவவும். சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி, நீரில் அலசி வையுங்கள். இஞ்சி, பூண்டு நசுக்கி வையுங்கள். தக்காளியை வெட்டிக் கொள்ளுங்கள். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து வையுங்கள்.
ஒரு அகலமான பாத்திர(குக்கரில்)த்திரத்தில் 4 தம்ளர் நீர்விட்டு, கறி, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பொடித்த மிளகு, சீரகம், மஞ்சள் தூள், கல் உப்பைப் போட்டு கிளறுங்கள்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மேலே வையுங்கள். கறி வெந்து வரும் வரை (20லிருந்து 25 நிமிடங்கள் ஆகலாம்) வேகவிடுங்கள். கறியில் இருக்கும் கொழுப்பின் மணத்தோடு, மிளகின் மணமும் சேர்ந்து புதுவித மணத்தை உண்டாக்கும். அந்த சமயம் கொத்தமல்லித்தழைத் தூவி பாத்திரத்தை இறக்குங்கள். குக்கரில் எனில் 4 விசில் வரை விட்டால் போதும்.
மண்ணின் மணம் வீசும் நாட்டுக் கோழி மிளகு சாறு, நிச்சயம் உங்கள் எல்லோரையும் சுண்டி இழுக்கும்!