Author Topic: ~ காராமணி போண்டா ~`  (Read 318 times)

Offline MysteRy

~ காராமணி போண்டா ~`
« on: April 22, 2016, 08:44:03 PM »
காராமணி போண்டா



காராமணி – 1 கப்,
சிவப்பு மிளகாய் – 2,
தேங்காய் (பொடியாக அரிந்தது) – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு,
எண்ணெய் – பொரிக்க.

காராமணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் உப்பு, சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும். தேங்காயை சிறிதாக அரிந்து கொள்ளவும். கறிவேப்பிலை, பெருங்காயம், தேங்காய் சேர்த்து மாவில் கலக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி மாவை கிள்ளி போண்டாக்களாக பொரித்தெடுக்கவும். தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். குறிப்பு: காராமணியை அரைத்தவுடன் சிறிது தளர இருந்தால் 2 டீஸ்பூன் அரிசி மாவை சேர்க்கலாம்.