Author Topic: ~ கிரீன் சட்னி பிரட் பக்கோடா ~  (Read 348 times)

Online MysteRy

கிரீன் சட்னி பிரட் பக்கோடா



தேவையான பொருட்கள்

பிரட் – நான்கு
உருளை கிழங்கு – இரண்டு (வேகவைத்து மசித்தது)
சிகப்பு மிளகாய் தூள் – அரை தேகரண்டி
கரம் மசாலா – கால் தேகரண்டி
சாட் மசாலா – கால் தேகரண்டி
எலுமிச்சை பழம் சாறு – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை மாவு – கால் கப்
கிரீன் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி – அரை கட்டு
முந்திரி – ஐந்து
உப்பு – சிட்டிகை

செய்முறை

கிரீன் சட்னி:

 கொத்தமல்லி, முந்திரி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி யாக அரைத்து கொள்ளவும்.
உருளை கிழங்கு மசாலா: உருளை கிழங்கு மசியல், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு ஆகியவற்றை ஒன்றாக காலத்து கொள்ளவும்.
கடலை மாவை கரைசல்: கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள் கால் டீஸ்பூன் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.
பிரட்டை சதுரம்மாக வெட்டி கொள்ளவும்.
கிரீன் சட்னி பிரட் பக்கோடா

செய்முறை:
 
பிரட் துண்டை எடுத்துக்கொண்டு அதன் மேல் கிரீன் சட்னி தடவி, பிறகு அதன் மேல் உருளை கிழங்கு மசாலா தடவி, அதன் மேல் இன்னொரு பிரட் துண்டை வைத்து அழுத்தி கடலை மாவு கரைசலில் முக்கி சுடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.பொன்னிறம் வந்தயுடன் எடுத்து பரிமாறவும்.