Author Topic: தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்  (Read 499 times)

Offline சக்திராகவா

ஆங்கிலப்புத்தாண்டுக்கு
அடைமழை வாழ்த்து
அருந்தமிழ் ஆண்டோ
அமைதியில் பூக்குது

என் ஏர் சுமந்த ஏழைக்கு
எட்டாத உன் வாழ்த்து
ஏட்டில்கூட ஏறாது!
குருதி குணமாறாது!

எத்தனை கிராமங்கள்
நாளை விருந்துக்கு
அழைக்கும் புத்தாண்டை

காலத்து மாற்றத்தில்
கடவுளுக்கும் பங்குண்டோ?
படித்தவர் படைப்பது
பாக்கெட் பலகாரம்

நீர் பெருகி
நிலம் நனைத்து
பாரெங்கும்
பயிர் பெருக
திரை திறக்கபோகும்
சித்திரை முதல் நாள்
வாழ்த்துகள்
...சக்தி ராகவா