Author Topic: ~ பால்கோவா ~  (Read 482 times)

Offline MysteRy

~ பால்கோவா ~
« on: April 03, 2016, 09:22:18 PM »
பால்கோவா



பால் – 7 லிட்டர்
சீனி – 750 கிராம்
நெய் – முக்கால் லிட்டர்

அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்சவும். இரும்பு வாணலி இல்லாதவர்கள் அடிக்கனமான, வாயகன்ற வேறு பாத்திரத்தைப் பயன்படுத்தலாம். பால் கொதிவர ஆரம்பித்ததும் சீனியைக் கொட்டி நன்கு கிளறவும்.
இனி விடாது கிளறவேண்டும். பால் நன்கு சுண்டி வரும் வரை கிளறவும். பால் சுண்ட ஆரம்பித்தவுடன் கலர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும்.
மேலும் விடாது கிளறி, பால் சுண்டி கெட்டியாகத் தொடங்கியவுடன் அதில் நெய்யை ஊற்றவும். நெய் முழுவதையும் ஒரே முறையில் ஊற்றி விடாமல், முதலில் பாதியை ஊற்றி கிளறிவிட்டு, பிறகு மீதியை ஊற்றலாம்.
பின்னர் நெய்யுடன் சேர்த்து நன்கு கிளறவும். நெய் நன்கு சேர்ந்து கோவா கெட்டியாகத் தொடங்கியவுடன் இறக்கி வைத்து, கோவாவை சட்டி முழுவதும் பரப்பி, கிளறி விட்டு சூட்டை தணிக்கவும்.
இப்போது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்டவும்.