Author Topic: ~ முடக்கத்தான் கீரை தோசை ~  (Read 317 times)

Offline MysteRy

முடக்கத்தான் கீரை தோசை



தேவையானபொருள்கள்

புழுங்கல் அரிசி – அரைப்படி
உழுந்து – 100 கிராம்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முடக்கத்தான் இலை – 1 கைப்பிடி
எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 3
மிளகு – 25 கிராம்.

செய்முறை

அரிசியைத் தனியாகவும் உளுந்து + வெந்தயத்தைத் தனியாகவும் ஐந்து மணி நேரம் ஊறவையுங்கள். பின் தனித்தனியாக அரைத்து ஒன்றாக சேர்த்து உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஓர் இரவு மாவு புளிக்க வேண்டும். தோசை வார்ப்பதற்கு முன்பாக முடக்கத்தான் இலையை எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இலையை மாவோடு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெலிதாக வெட்டிக் கொள்ளுங்கள். மிளகை தூளாக்கிக் கொள்ளுங்கள். தோசையை ஊற்றி அதன்மேல் வெங்காயத்தையும், மிளகுத்தூளையும் தூவி வேக விடுங்கள். முடக்கத்தான் கீரை தோசை ரெடி.