Author Topic: ~ பிராமண சமையல்- கத்தரிக்காய் தாளித்த கூட்டு ~  (Read 382 times)

Offline MysteRy

பிராமண சமையல்- கத்தரிக்காய் தாளித்த கூட்டு



கத்தரிக்காய் – கால் கிலோ
புளி – நெல்லிக்காய் அளவு
துவரம் பருப்பு – ஒரு பெரிய கரண்டி
மிளகாய் வற்றல் – 4
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
துருவிய தேங்காய் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
வெல்லம் – ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளி, உப்பு, வெல்லம் மூன்றையும் ஒன்றாய் சேர்த்து தண்ணீரில் ஊறவிடவும்.
பிஞ்சு கத்திரிக்காய்களாக தேர்வு செய்து அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி நீரில் போடவும். அதில் சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து வேக வைக்கவும்.
அத்துடன் வெந்த பருப்பையும் சேர்க்கவும். காய் நன்கு வெந்த பிறகு புளிக் கரைசலை கெட்டியாக கரைத்து அதில் சேர்க்கவும்.
தேங்காய் எண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து பின்னர் கடலைப் பருப்பு, பெருங்காயம், மிளகாயைக் கிள்ளிப் போட்டு சிவக்க வறுக்கவும்.
இறுதியில் தேங்காய் துருவலைப் போட்டு சிறிது நேரம் வறுத்து எடுத்து கூட்டில் கொட்டவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு கிளறவும்.
கூட்டு கெட்டியாக வேண்டுமென்றால் சிறிது அரிசிமாவினை சேர்த்துக் கொள்ளவும்.