Author Topic: ~ பேரிச்சம் பழ கேசரி ~  (Read 312 times)

Offline MysteRy

~ பேரிச்சம் பழ கேசரி ~
« on: April 02, 2016, 08:28:16 PM »
பேரிச்சம் பழ கேசரி



தேவையான பொருள்கள்:

பேரிச்சம் பழம் -10
டூட்டி புருட்டி – 50 கிராம்
ரவை – 1 கப்
சர்க்கரை – 2 கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்
முந்திரி,கிஸ்மிஸ் – சிறிதளவு
நெய் – 3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு சர்க்கரை போட்டு நன்கு கரைத்து கொள்ளவும்.பிறகு அதனை கொதிக்க வேண்டும்.
கொதி வந்தவுடன் அதில் பேரிச்சம் பழம், முந்திரி,கிஸ்மிஸ், டூட்டி புருட்டி போன்றவற்றை போட்டு பின்னர் அதில் ரவையை போட்டு கிளரவும்.இடைஇடையே சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி ரவை நன்றாக வெந்து கேசரி பதத்திற்கு வந்தவுடன் எசன்ஸ் ஊற்றி கிளரவும்.