Author Topic: ~ வெங்காயத் துவையல் ~  (Read 352 times)

Online MysteRy

~ வெங்காயத் துவையல் ~
« on: March 31, 2016, 08:34:17 PM »
வெங்காயத் துவையல்



தேவையானபொருட்கள்:

சின்ன வெங்காயம் – 200 கிராம்
மிளகாய் வற்றல் – 2
உளுத்தம்பருப்பு – 50 கிராம்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை தோல் உரித்து, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கித் தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் இரண்டையும் வறுத்து, மிக்ஸியில் அரைக்கவும்.
சிறிது மசிந்ததும் புளி, உப்பு சேர்த்து அரைத்து, அதற்குப் பிறகு வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். தண்ணீர் விடக்கூடாது.

குறிப்பு:

இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் சிறந்த காம்பினேஷன்.