Author Topic: ~ இளநீர் சோடா ~  (Read 509 times)

Offline MysteRy

~ இளநீர் சோடா ~
« on: March 30, 2016, 11:04:30 PM »
இளநீர் சோடா



இளநீர் – ஒன்று ( வழுக்கையுள்ள இளநீர் பெரியது )
சோடா – 300 மில்லி
சீனி – 3 மேசைக்கரண்டி
ஐஸ்கட்டிகள் – 2 கப்

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
இளநீரையும், அதன் வழுக்கை பாகத்தையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வழுக்கைபாகம், சீனி, ஐஸ்கட்டிகள் மூன்றையும் போட்டு இரண்டு நிமிடம் வரை நன்றாக சுற்ற விடவும்.
பின்னர் இளநீரை அதில் ஊற்றி மீண்டும் இரண்டு நிமிடம் சுற்ற விடவும்.
மிக்ஸியில் இருந்து பாத்திரத்திரத்திற்கு மாற்றி அதனுடன் சோடாவை ஊற்றி மெதுவாக கலக்கவும். உடனே பரிமாறவும்.
வெயிலிற்கு இதமான இளநீர் சோடா தயார்.