Author Topic: ~ உடல் வலுவூட்டும் அழகர்கோவிலின் புகழ்பெற்ற புழுங்கலரிசி தோசை ~  (Read 367 times)

Offline MysteRy

உடல் வலுவூட்டும் அழகர்கோவிலின் புகழ்பெற்ற புழுங்கலரிசி தோசை



தேவையானவை

புழுங்கல் அரிசி — 1 கப்
உளுந்தம் பருப்பு — 1 கப்
பச்சரிசி — 1 கப்
மிளகு — 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் வத்தல் — 8
இஞ்சி — 1 அங்குலம் அளவு
கறிவேப்பிலை — 20 இலை
உப்பு — ருசிக்கேற்ப

செய்முறை

* புழுங்கலரிசி, உளுந்தம் பருப்பை தனியாக ஊற வைத்து, இட்லி மாவு பதத்தில் ஆட்டிக் கொள்ளவேண்டும்.
* மிளகு, இஞ்சி, வற்றல் இவற்றை ஒன்றாக ஆட்டிக் கொள்ளவும்.
* பச்சரிசியை இடித்து சலித்துக் கொள்ளவேண்டும்.
* எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து வைத்து மறுநாள் காலையில் தோசையாக வார்த்து  திருப்பி போட்டு கவனமாக எடுத்து பரிமாறவும்.
புகழ்பெற்ற அழகர்கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சத்து மிகுந்த தோசை இது