Author Topic: ~ பைனாப்பிள் ஜெல்லி புட்டிங் ~  (Read 324 times)

Offline MysteRy

பைனாப்பிள் ஜெல்லி புட்டிங்



பைனாப்பிள் – ஒன்று (நடுத்தரமான அளவு)
கன்டெண்ஸ்டு மில்க் – ஒரு டின் (400கி)
ஜெல்லி – 2 பாக்கெட் (வெவ்வேறு ஃப்ளேவர்களில்)
ஜெலட்டின் – 2 தேக்கரண்டி
சீனி – முக்கால் கப்
பைனாப்பிள் எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி

பைனாப்பிளைச் சுத்தம் செய்து நடுவில் இருக்கும் தண்டை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஜெல்லியை அதன் பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள அளவைவிட அரை கப் குறைவாக தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். நன்கு செட் ஆனதும் சிறு துண்டுகளாக நறுக்கி (ஃபிரிட்ஜிலேயே) வைக்கவும்.
ஜெலட்டினை கால் கப் தண்ணீர் ஊற்றி டபுள் பாய்லிங் முறையில் கரைத்து ஆறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
சீனி முழுவதும் கரைந்ததும் நறுக்கி வைத்துள்ள பைனாப்பிள் துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிட்டு, இறக்கி நன்கு ஆறவிடவும். (பைனாப்பிளை வேக வைக்க வேண்டாம். கொதித்தவுடன் இறக்கிவிடவும்).
ஆறியதும் தண்ணீரை வடித்துவிட்டு பைனாப்பிள் துண்டுகளை ஒரு பவுலில் போடவும். அதனுடன் கன்டெண்ஸ்டு மில்க்கைச் சேர்த்து 15 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
15 நிமிடங்களுக்குப் பிறகு ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து அதனுடன் நறுக்கிய ஜெல்லி துண்டுகள், எசன்ஸ், ஜெலட்டின் கரைசல் சேர்த்து கலந்து மீண்டும் ஃபிரிட்ஜில் வைத்து, செட் ஆனதும் பரிமாறவும். (இந்தக் கலவையை ஐஸ் க்ரீம் பவுலில் ஊற்றியும் ஃபிரிட்ஜில் வைத்தெடுக்கலாம்).
டேஸ்டி பார்ட்டி ஸ்பெஷல் பைனாப்பிள் வித் ஜெல்லி புட்டிங் தயார்.