Author Topic: ~ கோகோ சாக்லேட் ~  (Read 367 times)

Online MysteRy

~ கோகோ சாக்லேட் ~
« on: March 27, 2016, 08:36:02 PM »
கோகோ சாக்லேட்



கோகோ சாக்லேட்பால் பவுடர் – 200 கிராம்
சீனி – 200 கிராம்
வெண்ணெய் – 50 கிராம்
கோக்கோ – 4 தேக்கரண்டி
பாதாம் பருப்பு – 6
முந்திரி – 10
தண்ணீர் – 50 மில்லி

முதலில் முந்திரி, பாதாம் பருப்புகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் மற்றும் கோக்கோவை சலித்துக் எடுத்து அதில் நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் பருப்பை கலந்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் சீனியையும் தண்ணீரையும் சேர்த்து பாகு காய்ச்சவும்.
பாகை ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் பாகை விட்டால் பாகு உருட்டு பதம் வந்ததும் அடுப்பை இருந்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
அதில் வெண்ணையை காய்ச்சி உருகியதும் எசன்ஸ் சேர்த்து பால் கலவையை கொட்டி கிளறவும்.
கலவையை அடுப்பில் ஒரு நிமிடம் வைத்து நன்றாக கிளறி வெண்ணை தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.
அதிக நேரம் அடுப்பில் இருந்தால் மெதுவாக இருக்காது.