Author Topic: ~ பப்பாளிப் பழத்தின் மருத்துவ பயன்கள் ~  (Read 331 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226727
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பப்பாளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்



எல்லாக் காலங்களிலும்கிடைக்கும் ஒரு அருமையான பழம் பப்பாளிப் பழம் இது வெப்ப பிரதேசங்களில் நன்றாக விளையக் கூடியது. இது கிராம புறங்கள் அல்லாமல் நகர்ப்புற வீடுகளிலும் இந்த மரத்தை நாம் காணலாம். இதை வளர்க்கும் முறை மிகவும் எளிமையானது விதைகளை போட்டாலே போதும் இது விரைவில் வளர்ந்து மரமாக நிற்க்கும். இதில் ஆண் மரம் மற்றும் பெண் மரம் என்று இரு வகை உண்டு. ஆண் மரத்தில் கொத்து கொத்தாக பூக்கள் மட்டுமே பூக்கும் பழங்கள் வராது. பெண் மரத்தில் ஒவ்வொரு இலையின் காம்பு ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு பூ மலரும் அதுவே வளர்ந்து கணியாக மாறும்.
இது பழுத்தவுடன் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாக இருக்கும். இப்பழம் அதிக சூடுள்ள பழம் என்று நினைத்து பலர் சாப்பிடாமல் இருப்பர் அது தவறான கருத்தாகும். இதில் உள்ள சூடு எந்த வித பாதிப்பையும் நமக்கு ஏற்ப்படுத்தாது.
உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்க கூடிய இப்பழம் மாம்பழத்திற்கு அடுத்து இதில்தான் அதிக அளவு வைட்டமின்கள் இருக்கின்றன.
இதில் குளுக்கோஸ், இரும்புச் சத்து, உலோகச் சத்து, சுண்ணாம்புச் சத்து, எரியம், புரதம், நியாசின்,தயாமின், ரிபோஃப்ளேவின் ஆகிய சத்துக்ளும் எ,எ1,பி1,பி2 மற்றும் சி வைட்டமின்களும் நிறைந்துள்ளன. விலையுயர்ந்த பழத்தை வீட பல்வேறு சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளன. இதில் பெப்சின் என்னும் சத்து அதிக அளவில் உள்ளது. இந்த சத்து குடலில் உள்ள ஏற்படும் நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது.
நமது இரத்தத்தில் கலக்கும் எந்த விதமான கிருமிகளையும் அழிக்கும் வல்லமையுடைய பழம் இது மற்றும் இரத்தத்தை விருத்தி செய்யும். இப்பழத்தை உண்பதால் சொறி சிரங்கு குணமாகும். உடலிலுள்ள புண்கள் விரைவிலேயே குணமாகும். உடற் சோம்பலை போக்கும். பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும், பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்.நரம்புகளில் முறுக்கேற்றும், தொற்று நோயை அண்ட விடாது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை பெற்ற பெண்கள் இப்பழச்சாற்றை உட்கொண்டால் அதிக பால் சுரப்பு ஏற்படும்.குடற் புண்களை ஆற்றும். உதடுகளில் ஏற்படும் வரட்சி, வாய் ஓரங்களில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்த கூடியது.
மலச்சிக்கலுக்கு எளிய மருந்தாக பயன்படுகிறது. இந்த பழத்தை காலை மூன்று துண்டுகளும் மாலை மூன்று துண்டுகளும் ஐந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை குணப்டுத்தலாம்.மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோயை குணப்படுத்த பதினைந்து நாட்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மூல நோயின் மூலமே அற்று விடுமாம்.
வயிறு சரியில்லாதவர்களுக்கு எந்த வேலையும் செய்யவும் தோன்றாது சாப்பிடவும் தோன்றாது. இப்படிபட்டவர்கள் பப்பாளி பழம் சாப்பிட்டு அன்று முழுவதும் எந்த உணவையும் தொடாமல் இருந்தால். வயிறு சரியாகிவிடும்
இப்பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் வரை உணவு உண்ட பின் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும். இரத்தம் விருத்தியாகும் மற்றும் உடல் பளபளக்கும்.
இந்த மலிவான பழத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளது. இதை நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம்