Author Topic: ~ கத்திரிக்காய் காரக்குழம்பு ~  (Read 370 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226930
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கத்திரிக்காய் காரக்குழம்பு



தேவையான பொருட்கள்:

சிறிய கத்திரிக்காய் – 10
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 10 பல்
தக்காளி – 4
புளி – எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் – 2 1 / 2 தேக்கரண்டி
தனியாதூள் – 1 1 / 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 / 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

அரைக்க

தேங்காய்துருவல் – 3 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு – 4
கசகசா – 2 தேக்கரண்டி
சோம்பு – 1 / 4 தேக்கரண்டி
மிளகு – 1 / 4 தேக்கரண்டி
பூண்டு – 2 பல்

தாளிக்க

கடுகு – 1 / 2 தேக்கரண்டி
வெந்தயம் – 1 / 2 தேக்கரண்டி
சோம்பு – 1 / 2 தேக்கரண்டி
எண்ணெய் – கால் கப்

செய்முறை

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கத்திரிகாயை காம்பு நறுக்கி, கீறிக் கொள்ளவும்.
புளியை 2 1 / 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளி,கத்திரிக்காய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
கத்திரிக்காய் வதங்கும்போது தனியாதூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் புளி தண்ணீரை சேர்க்கவும்.
நன்றாகக் கொதித்த பின்பு அரைத்த பொருட்களை இதில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.