Author Topic: ~ இரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பதிமுகம் ~  (Read 350 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226727
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பதிமுகம்



இரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பதிமுகம்வேறுபெயர்கள் சப்பான் மரம்,. பதாங்கம், பதாங்கா, கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா.
ஆங்கிலப் பெயர் சிசால்பினேசப்பான், Caesalpinia sappan சிசால்பினேசி எனும் தாவரக் குடும்பம்.

மருத்துவக் குணங்கள் :
இதன் மரக்கட்டைத் தூளை உபயோகித்து மிகச்சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பானாக கேரள மாநிலத்தில் 95% வீட்டிலும் உணவகத்திலும் தினமும் குடிதண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது அரிய மருத்துவ குணமிக்க இம்மரத்திலிருந்ந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகையான கேன்சர் குணமாகிறது.
சர்க்கரை நோய் கட்டுப்படுகிரது, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப் படிகிறது. சிறுநீரகக் கோளாறுகள் சீரடைகிறது. மூலநொய் குணமடைகிறது. கொழுப்பு விகிதம் சமச்சீராகிறது. வயிறு சம்மந்தமான நோய்களுக்குச் சரியான பலனளிக்கின்றது.
முதிர்ந்த மரத்தின் மையப்பகுதியினின்று பெறப்படும் சாயம் தோல், பட்டு, பருத்தியிழை, கம்பளி, நார்காலிகோ, அச்சுத்தொழில், மரச்சாமான்கள் வீட்டுத்தரை, சிறகு, மருந்துகள் மற்றும் பல்வேறுபட்ட கைவினைப் பொருட்களை வண்ண மூட்டப் பயன்படுத்தப்படுகிறது. பத்தமடை கோரைப் பாய்கள் பதிமுக வண்ணத்தால் சாயமூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பதிமுக சாயம் ‘கயா’ என்னும்மரச் சாயமுடன் கலக்கும் போது கறுப்பு, ஊதா மற்றும் சிகப்பு வண்ணச் சாயங்கள் உருவாக்கப்பட்டு அவை பனைஒலை, மற்றும் தாழை, கைவினைப் பொருட்களை வண்ணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய மருத்துவத்தில் பயன்படும் ‘லூக்கோல்’ என்னும் மருந்தில் பதிமுகம் பயன்படுத்தப்படுகின்றது. இது கற்பப்பையினுள் கருவி மூலம் சோதனை செய்யும் போது உதிரம் கொட்டுதல் போன்றவற்றை மட்டுப்படுத்திகிறது. இலைகளினின்று பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சாணம், போன்றவற்றிக்கு எதிராகப்பயன்படுகின்றது. மிக அதிக அளவில் கரியமில வாயுவை கிரகித்துக் கொள்வதுடன் மிக அதிக அளவில் பிராண வாயுவைவெளிப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை அற்புதமாக பாதுகாக்கிறது. மழை வளத்தைத்தூண்டுகிறது.