Author Topic: ~ முட்டை சேர்க்காத பர்கர் பன் ~  (Read 489 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227473
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முட்டை சேர்க்காத பர்கர் பன்



தேவையான பொருட்கள்

மைதா – 400 கிராம்
பட்டர் – 50 கிராம்
சர்க்கரை – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சூடான பால் – தேவையான அளவு
ஈஸ்ட் – 1 மேஜைக்கரண்டி
பால் – சிறிது
எள் – மேலே தூவ

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

சூடான பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
அதில் பட்டரை போடவும்
சர்க்கரை சேர்க்கவும்
பின்பு ஈஸ்ட் சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
பின்பு ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்துக் கொள்ளவும்
பின்பு அதனுடன் ஈஸ்ட் கலந்த பாலை விடவும்
பின்பு அதனை நன்கு பிசையவும்
பின்பு அதனை வெறொரு பாத்திரத்தில் வைத்து மூடி வைக்கவும்
இப்போது மாவு சிறிது உயர்ந்துள்ளது
பின்பு மாவை மீண்டும் நன்கு பிசையவும்
பின்பு மாவை சிறு சிறு துண்டுகளாக பிரித்து அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு ட்ரேயில் வைக்கவும். மாவின் அளவு சிறிது உயர்ந்திருக்ககும்
பின்பு அதன் மீது பாலை தடவி அதன் மேல் எள் தூவவும்
பின்பு அதனை அவனில் வைத்து 220 டிகிரி அல்லது 450 டிகிரியில் வைக்கவும்
பர்கர் பன் ரெடி