Author Topic: ~ மரவள்ளிக் கிழங்கு அடை ~  (Read 374 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227473
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மரவள்ளிக் கிழங்கு அடை



தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 3
மரவள்ளிக் கிழங்கு – கால் கிலோ
தேங்காய் – அரை மூடி (துருவியது)
இஞ்சி , – 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிதளவுத (பொடியாக நறுக்கியது)
தயிர் – 1/4 கப்
எண்ணெய், உப்பு, மிளகு
சீரகம் , காயத் தூள் – தேவைக்கு

எப்படிச் செய்வது?

அரிசியை 8 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி யில் மரவள்ளிக் கிழங்கைப் பொடித்து போட்டு கெட்டியாக அரைக்கவும். தேங்காயைச் சேர்க்கவும். இத்துடன் தயிர், பெருங்காயத் தூள்,உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம்,உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து அடை மாவு பதத்துக்குக் கலக்கவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறு சிறு அடைகளாக தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போடவும் . இப்போது மரவள்ளிக் கிழங்கு அடை ரெடி.