Author Topic: ~ சேமியா கேசரி! ~  (Read 323 times)

Online MysteRy

~ சேமியா கேசரி! ~
« on: March 19, 2016, 09:06:45 PM »
சேமியா கேசரி!



தேவையான பொருட்கள்:

சேமியா – அரை கிலோ
சர்க்கரை – 300 கிராம்
நெய் – 200 கிராம்
முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை – 100 கிராம்
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் – சிறிதளவு
தண்ணீர் – 4 கப்

செய்முறை

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் தேவையான அளவு நெய்யைச் சேர்த்து, அதில் சேமியாயாவைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க விடவும். நீர் கொதிக்கும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவைப் போட்டுக் கிளறி விடவும். சேமியா நன்றாக வெந்ததும் அத்துடன் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் கேசரி பவுடரை சிறிது நீரில் கரைத்து கேசரியில் ஊற்றிக் கிளறவும். மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் கேசரியில் போட்டு, மீண்டுமொருமுறை நன்றாகக் கிளறி, நெய் தடவிய வேறொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும். சுவையான சேமியா கேசரி தயார்.