Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
உடல் எடை வேகமா குறைய – மதியம் சாப்பாட்டிற்கு பதிலாக இதுல ஒரு டம்ளர் குடிச்சா..
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: உடல் எடை வேகமா குறைய – மதியம் சாப்பாட்டிற்கு பதிலாக இதுல ஒரு டம்ளர் குடிச்சா.. (Read 356 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226727
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
உடல் எடை வேகமா குறைய – மதியம் சாப்பாட்டிற்கு பதிலாக இதுல ஒரு டம்ளர் குடிச்சா..
«
on:
March 19, 2016, 07:40:09 PM »
உடல் எடை வேகமா குறைய – மதியம் சாப்பாட்டிற்கு பதிலாக இதுல ஒரு டம்ளர் குடிச்சா..
உடல் எடையைக் குறைக்க சிறந்த வழிகளுள் ஒன்று, உடலுக்கு ஏற்ற டயட்டைப் பின்பற்றுவது தான். மற்றொன்று திரவ உணவுகளின் மூலம் எடையைக் குறைப்பது. அதில் இதுவரை எந்த ஜூஸ் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று பார்த்தோம்
htr
ஸ்மூத்தி 1
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 2 கப்
பழங்கள் – 2 கப் (உங்களுக்கு பிடித்தது)
உலர் பழங்கள் – 1/4 கப்
நட்ஸ் – 1/4 கப்
பசலைக்கீரை – 1 கப்
ஓட்ஸ் – 1/4 கப்
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, பின் அதனை மதிய வேளையில் உணவிற்கு பதிலாக குடித்து வர வேண்டும்.
ஸ்மூத்தி 2
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை – 1
கையளவு கேல் – 1
கையளவு பேரிக்காய் – 1/2
வாழைப்பழம் – 1
குளிர்ந்த பாதாம் பால் – 1 1/2 கப்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கேல் கீரையின் இலைகளை பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் பசலைக்கீரை மற்றும் பாதாம் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அத்துடன் வாழைப்பழம், தேன் மற்றும் பேரிக்காய் சேர்த்து நன்கு அரைத்து குடிக்க வேண்டும்.
ஸ்மூத்தி 3
தேவையான பொருட்கள்:
கெட்டி தயிர் – 1/4 கப்
ப்ளூபெர்ரி – 1/4 கப்
கிரான் பெர்ரி – 1/4 கப்
ஸ்ட்ராபெர்ரி – 1/4 கப்
வாழைப்பழம் – 1/2
பசலைக்கீரை – 1 கையளவு
தண்ணீர் – சிறிது
ஐஸ்கட்டிகள் – சிறிது
செய்முறை:
முதலில் ஐஸ்கட்டிகளைத் தவிர, அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொண்டு, பின் அத்துடன் ஐஸ்கட்டிகளை சேர்த்து பருக வேண்டும்.
இந்த ஸ்மூத்தி மதிய வேளையில் மட்டுமின்றி, உடற்பயிற்சி செய்த பின் பருகுவதற்கும் ஏற்றது.
ஸ்மூத்தி 4
தேவையான பொருட்கள்:
கொக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வாழைப்பழம் – 1
கெட்டி தயிர் – 1/4 கப்
பட்டைத் தூள் – 1/2 டீஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – சிறிது
செய்முறை:
முதலில் மிக்ஸியில் வேர்க்கடலை வெண்ணெய், கொக்கோ பவுடர், கெட்டி தயிர் மற்றும் ஐஸ்கட்டிகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதன் மேல் பட்டைத் தூளை தூவி பருக வேண்டும்.
இதனால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படுவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.
ஸ்மூத்தி 5
தேவையான பொருட்கள்:
அவகேடோ/வெண்ணெய் பழம் – 1/2
கேல் – 1/2 கப்
கெட்டி தயிர் – 1/2 கப்
வென்னிலா பாதாம் பால் – 1/2 கப்
மாம்பழம் – 1/2 கப்
தேன் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அவகேடோ, கேல், த்யிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் பாதாம் பால், மாம்பழம், தேன் சேர்த்து நன்கு அடித்து, சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்து குடிக்கவும்.
ஸ்மூத்தி 6
தேவையான பொருட்கள்:
ப்ளூபெர்ரி – 1 1/2 கப்
ராஸ்ப்பெர்ரி – 1/3 கப்
ப்ளாக்பெர்ரி – 1/3 கப்
வேர்க்கடலை வெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 1/2 டேபிள்
ஸ்பூன் பால் – 1 கப்
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒன்றாக அடித்து குடிக்கவும்.
இந்த ஸ்மூத்தியை குடித்து வருவதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காது மற்றும் உடல் நன்கு சுறுசுறுப்புடனும் இருக்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
உடல் எடை வேகமா குறைய – மதியம் சாப்பாட்டிற்கு பதிலாக இதுல ஒரு டம்ளர் குடிச்சா..