Author Topic: ~ நல்லி ரோஸ்ட் ~  (Read 339 times)

Offline MysteRy

~ நல்லி ரோஸ்ட் ~
« on: March 19, 2016, 08:40:48 PM »
நல்லி ரோஸ்ட்



தேவையான பொருட்கள்:

நல்லி எலும்பு – அரை கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
சோம்பு தூள் – அரை மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி
மிளகு தூள் – அரை மேசைக்கரண்டிகெட்டித் தேங்காய்ப் பால் – கால் கப்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, எண்ணெய்
மிளகு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – கால் கைப்பிடி
காய்ந்த மிளகாய் – 2

செய்முறை:

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
நல்லி எலும்பைச் சுத்தம் செய்து குக்கரில் போட்டு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அத்துடன் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
பிறகு வேக வைத்த நல்லி எலும்பை அதிலுள்ள தண்ணீருடன் சேர்க்கவும். தீயை அதிகரித்து வைத்து தண்ணீர் வற்றும் வரை அடிபிடிக்காமல் கிளறிவிடவும்.
முக்கால் வாசித் தண்ணீர் வற்றியதும் கெட்டித் தேங்காய்ப் பால் சேர்த்து மூடி போடாமல் சிறு தீயில் வைத்துக் கிளறவும்.
தேங்காய்ப் பால் நன்கு வற்றி வறுவல் பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்க்கவும்.
சுவையான நல்லி ரோஸ்ட் ரெடி. ரசம் சாதம், இட்லி, தோசை மற்றும் ஆப்பத்திற்குத் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.