Author Topic: ~ தாளிச்ச காஞ்சிபுரம் இட்லி ~  (Read 316 times)

Offline MysteRy

தாளிச்ச காஞ்சிபுரம் இட்லி



தேவையானவை:

அரைக்க:


புழுங்கலரிசி – 1 டம்ளர்
பச்சரிசி – 1 டம்ளர்
உளுத்தம்பருப்பு – 1 டம்ளர்
வெந்தயம் – சிறிதளவு
அவல் – ஒரு கைப்பிடி

தாளிக்க:

நெய் – 1 மேசைக்கரண்டி,
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி.
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி,
இஞ்சி – 2 துண்டு (துருவியது)
சுக்குத்தூள்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 தேக்கரண்டி(நறுக்கியது),
மிளகு – 1 தேக்கரண்டி (உடைத்தது),

செய்முறை:

• அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைத்து நறநற பதத்தில் அரைத்து உப்பு போட்டு கரைத்து மாவை 3 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
• எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பைத் தாளித்து அதில் நெய், உடைத்த மிளகு, சுக்குத்தூள், துருவின இஞ்சி, கறிவேப்பிலையை சேர்க்கவும். பின்னர் இதை மாவை போட்டு நன்றாக கலக்கவும்.
• இட்லி குக்கரில் தண்ணீர் விட்டு பெரிய குவளைகளில் அல்லது டம்ளர்களில் எண்ணெய் தடவி பிடித்த வடிவங்களில் இட்லிகளாக வார்த்து எடுக்கவும்.
• காபி டம்ளர், டவராக்களில் எண்ணெய் தடவி வைக்கும் போது இட்லி வெந்ததா என்பதை அறிய ஒரு கத்தியால் இட்லியைக் குத்தி, ஒட்டாமல் வருகிறதா என்று பார்க்க வேண்டும். ஒட்டாமல் வந்தவுடன் தலைகீழாக டம்ளரை கவிழ்க்க அதே வடிவத்தில் இட்லி தயாராகியிருக்கும்.
• பொதுவாக இவ்வகை இட்லிகள் 15 நிமிடங்களில் வெந்து விடும். புதினா சட்னி, காரச் சட்னி, வெங்காயச்சட்னி போன்றவற்றும் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:

 1. மிளகு, இஞ்சி சேர்வதால் உடல் நிலை சரியில்லாதவர்களுக்கும் பயணிப்பவர்களுக்கும் அருமையான உணவு.