Author Topic: ~ சிறுநீரகக்கல் பிரச்சனையா? இதோ வாழைத்தண்டு மோர்க்கூட்டு ~  (Read 333 times)

Offline MysteRy

சிறுநீரகக்கல் பிரச்சனையா? இதோ வாழைத்தண்டு மோர்க்கூட்டு



தேவையானவை:

வாழைத்தண்டு – 1 துண்டு
தயிர் – 1 கப்
ப.மிளகாய் – 2
சீரகம் – அரை ஸ்பூன்
தனியா – அரை ஸ்பூன்
வேக வைத்த கடலைப்பருப்பு – அரை கப்
இஞ்சி சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
கடுகு, எண்ணெய் – அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.
• வாழைத்தண்டை பொடியாக நறுக்கி நாரை நீக்கி வைக்கவும்.
• தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.
• சுத்தம் செய்த வாழைத்தண்டை மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும்.
• ப.மிளகாய், தனியா, சீரகம், கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்து வேக வைத்த வாழைத்தண்டுடன் சேர்க்கவும்.
• பின்னர் கடைந்து வைத்துள்ள தயிரை சேர்த்து, உப்பு வெந்த கடலைப்பருப்பு சேர்த்து குறைந்த தீயில் அடுப்பை வைக்கவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வாழைத்தண்டு கலவையில் கொட்டி கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.