Author Topic: அன்பு கடத்தல்..,  (Read 374 times)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
அன்பு கடத்தல்..,
« on: March 18, 2016, 08:39:29 PM »
இவ்விடத்தில் நின்றுகொண்டிருக்குமென்னை
இன்னும் சில விநாடிகளில்
நெருங்கிவிடுவாய் நீ...
உன்னையும் என்னையும்
நோக்குகிறது
எனதுனது விழிகள் ...
பேசிவிடுவதென்று
முடிவு செய்கிறேன் ..
அதையே தான்
நீயும் செய்திருக்கிறாயென்று
அறிந்து கொள்ள முடிகிறது
லாவகமாய் நீ குறைக்கும்
நடையின் வேகத்தில் ....
இருந்தாலும் பரவுகிறது
மெலிதாயொரு அச்சம் ...
நெருங்கி விட்டாய்....
வரமறுக்கும் வார்த்தைகளை
வலுக்கட்டாயமாய் உதிர்க்கிறேன்...
நலமாவென்று...
நலமென்று சொன்னபடியே
நகர்ந்து செல்லுமுன்னை
மீண்டும் கவனிக்காமல்
நகர்ந்து விடவேண்டும் நான் .....
நீ
இன்னொருவன் மனைவியென்பதை
நினைத்தபடியும்
நானுனது காதலனென்பதை
மறந்தபடியும்.....
« Last Edit: March 18, 2016, 08:41:05 PM by PraBa »
Palm Springs commercial photography