Author Topic: ~ காய்கறி கதம்ப சாதம் ~  (Read 344 times)

Offline MysteRy

~ காய்கறி கதம்ப சாதம் ~
« on: March 18, 2016, 12:00:51 AM »
காய்கறி கதம்ப சாதம்



தேவையான பொருட்கள்:

அரிசி – 1 கப்,
தேங்காய்ப் பால் – 3 கப்,
ஒரு இன்ச் அளவில் அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( முருங்கை, உருளை, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, பட்டர் பீன்ஸ்)
வெங்காயம் – 1
தக்காளி – 1

அரைக்க :

பச்சைமிளகாய் – 2,
இஞ்சி – 1 இன்ச்,
பூண்டு – 2 பல்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
கொத்தமல்லித்தழை – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* இதில் அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கி அதன் பின் காய்கறிக் கலவையைச் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் அரிசியையும் போட்டு உப்பைச் சேர்த்துத் தேங்காய்ப் பால் ஊற்றி குக்கரில் 3 விசில் வரும்வரை வைக்கவும்.
* விசில் போனதும் குக்கர் முடியை திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
* காய்கறி கதம்ப சாதம் ரெடி.