Author Topic: ~ தக்காளி ஊறுகாய் ~  (Read 394 times)

Offline MysteRy

~ தக்காளி ஊறுகாய் ~
« on: March 17, 2016, 11:28:50 PM »
தக்காளி ஊறுகாய்



பெங்களூர் தக்காளி – அரைக் கிலோ
பட்டை வத்தல் – 30 எண்ணிக்கை
நல்லெண்ணெய் – 150 கிராம்
நாட்டுப்பூண்டு – 100 கிராம்
வறுத்து பொடித்த வெந்தயப்பொடி – அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 4 கொத்து
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி

தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை வேக வைத்து எடுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் பட்டை வத்தல் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கியவற்றுடன் அரைத்த தக்காளி விழுதினை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
அதில் வெந்தயப்பொடி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து அடி பிடிக்காமல் நன்றாக வதக்கவும். கலவை நன்கு சுருண்டு அல்வா பதத்திற்கு வரும் வரை வைத்திருந்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் இறக்கவும்.
சுவையான தக்காளி ஊறுகாய் ரெடி. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் எல்லாவற்றிற்கும் நல்ல காம்பினேஷன்.