Author Topic: ~ குழந்தைக்கு மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? ~  (Read 854 times)

Offline MysteRy

குழந்தைக்கு மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா?



குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை.
ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா?
அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும் பாலுமா இருக்க போகிறது?
Baby-being-tonsured-615x410
இல்லை இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். இவையெல்லாம் எமது உடம்பில் எவளவு ஊறியிருக்கும்.
வெறும் ஐந்து நிமிடம் கடல்நீரில் விரலை வைத்து துடைத்து விட்டு சுவைத்து பாருங்கள் எமது விரல் அப்போதும் உப்பாகத்தான் இருக்கும். 5நிமிடம் உப்பு நீரில் வைத்த விரலே இப்படியென்றால் பத்து மாதம் மலம் சிறுநீர் இரத்தம் சதை இவற்றுக்குள் கிடந்த எமது உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.
இதெல்லாம் எப்படி வெளியேறும்??
எமது உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் மயிர்கால்கள் வழியாக வெளியேறும். தலையில் உள்ள கழிவுகள் வெளியேற வழிகள் குறைவு. இதனால் சிரசில் அந்தக் கழிவுகள் தேங்கி நிற்கும் சந்தர்பங்கள் ஏற்படுகிறது. இதனால் பிற்காலத்தில் பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.
எனவேதான் சிரசில் மொட்டை போடுவது நேர்த்திக்கடன் என்ற பெயரில் முன்னோர்களால் பரப்பப்பட்டது. இதைப்போல் மீண்டும் ஒரு தடவை குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள்.
அது ஏற்கனவே மொட்டை போடும் போது ஏதாவது கிருமிகள் தவறியிருப்பின் இரண்டாவது மொட்டையில் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே.
தற்போது புரிகிறதா பிறந்த குழந்தைக்கு கோயிலில் மொட்டை போடுவது ஏன் என்பது. இது தொடர்பாக அறிவியல் ரீதியாக கூறினால் மக்கள் பின்பற்றமாட்டார்கள் என்பதற்காகத்தான் ஆன்மீகரீதியாக கூறி மக்களை பின்பற்ற வைத்துள்ளனர் முன்னோர்கள்.
ஆனால் அதற்கு ஆன்மிக ரீதியிலான வேறு ஒரு விளக்கத்தினையும் குறிப்பிட்டுள்ளனர். எது எப்படியே ஆன்மிகத்தில் கூறப்பட்ட பல்வேறு காரியங்களுக்கு அறிவியல் ரீதியிலான விளக்கங்கள் இருக்கின்றது என்பதே உண்மை.
***
இறைவனுக்காக – தலைமுடி காணிக்கை செலுத்துவது ஏன்?
உலகை காக்கும் பரம்பொருளுக்கு – நம்மை தெரியாதா? அவனன்றி ஒரு அணுவும் அசைவதில்லையே. அப்படிப் பட்ட இறைவனுக்கு – சாதாரண மனிதனாகிய நாம் என் செய்ய முடியும்?
மிக பிரபலமான ஜோதிடர் – திரு வித்யாதரன் அவர்கள் , விளக்கம் கூறிய ஒரு சில சுவாரஸ்யமான கருத்துக்கள் , நம் வாசகர்களிடம் இனி வரும் கட்டுரைகளில் பகிர்ந்து கொள்ள விருக்கிறோம்.
அவற்றில் ஒன்று , இறைவனுக்கு முடி காணிக்கை கொடுப்பது பற்றி.. சமயக் குரவர்கள் – நால்வரில் ஒருவரான சுந்தரர் காலத்து சம்பவம். …திருத் தொண்ட புராணத்தில் கூறிய – கலிக்காமர் பற்றிய சம்பவம் :இதோ…………
இறைவனுக்கு முடி காணிக்கை கொடுக்கும் வழக்கம் இன்று, நேற்றல்ல… புராண காலத்திலேயே இருந்துள்ளது. அதிலும், முதன் முதலாக தன் கூந்தலை இறைவனுக்கு அர்ப்பணித்தவள், அன்று திருமணம் செய்ய இருந்த மணப்பெண் என்றால், ஆச்சரியமாக உள்ளதல்லவா!
சோழநாட்டிலுள்ள பெருமங்கலம் எனும் ஊரில், ஏயர்கோன் கலிக்காமர் என்ற வீரர் வாழ்ந்து வந்தார். இவரை, சிவபக்தர் என்பதை விட, சிவபித்தர் என்றே சொல்லலாம். சோழநாட்டின் தளபதியாக பணி செய்தார். சிவபக்தியில் சிறந்த மானக்கஞ்சாறர் அப்பகுதியில் வசித்தார். அவரது மகள் தனக்கு மனைவியானால், தன் வாழ்க்கை இனிமையாக அமையுமென எண்ணினார்.
பெண் பார்க்கும் படலம் முடிந்து, முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டு விட்டது. மணநாள் அன்று, மணமகள் வீடுநோக்கி மணமகன் பவனி வந்து கொண்டிருந்தார். மணமகனை, எதிர்நோக்கிக் காத்திருந்தாள் மணப்பெண். அப்போது, ஒரு சிவனடியார் அங்கு வந்தார். மானக்கஞ்சாறரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதைத் தெரிந்து கொண்டார். அந்தப்பெண் அடியவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றாள். அவளது நீண்ட கூந்தலை நோட்டமிட்ட அந்தப் பெரியவர், “இது எனக்கு வேண்டும்… பஞ்சவடி (முடியால் செய்யப்படும் அகலமான பூணூல்) செய்ய பயன்படும்!’ என்றார்.
சிவனடியார்கள் கேட்பதை மறுக்காமல் கொடுத்துவிடும் குணமுள்ள மானக்கஞ்சாறர், மகளின் கூந்தலை மணநாள் என்றும் பாராமல், அரிந்து கொடுத்து விட்டார். அந்நேரம் வந்து சேர்ந்தார் மணமகன். கூந்தலற்று குனிந்து நிற்கும் பெண்ணைக் கண்டார். அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. சிவனடியாருக்காக தன் கூந்தலையே தியாகம் செய்தவள் இவள். மேலும், பெற்றவருக்கும் இவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட பக்தியுடையவள் தன் மனைவியாவதில் மிகுந்த மகிழ்ச்சியே என்று எண்ணினார்; திருமணம் சிறப்பாக முடிந்தது.
ஒருசமயம், சிவனின் நண்பரான சுந்தரர், சங்கிலிநாச்சியார் எனும் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி பரவை நாச்சியாருக்கு இது தெரிந்தால் சிக்கல் வருமே என அவளைச் சமாதானம் செய்வதற்காக, தன் நண்பரான சிவனை பரவையாரின் வீட்டுக்கு தூது போகச் சொன்னார். இதைக் கேள்விப்பட்ட கலிக்காமர், தன் சுயலாபத்துக்காக இறைவனை தூது போகச் சொன்ன சுந்தரர் மீது வெறுப்பில் இருந்தார்.
இதையறிந்த சிவபெருமான், கலிக்காமரையும், சுந்தரரையும் நண்பர்களாக்கும் பொருட்டு ஒரு நாடகமாடினார்.
கலிக்காமருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அதை சுந்தரரால் மட்டுமே தீர்க்க முடியுமென கலிக்காமர் மனைவியின் கனவில் வந்து சொன்னார் சிவபெருமான். இதையறிந்த சுந்தரரும் கலிக்காமரை காண வந்தார். தன் எதிரியால், தான் பிழைக்கக்கூடாது எனக்கருதிய கலிக்காமர், தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த சுந்தரர் மிகவும் வருந்தி, தானும் தற்கொலைக்கு முயன்றார். சிவபெருமான் அவரைத் தடுத்து, கலிக்காமருக்கும் உயிர் கொடுத்தார். அதன்பின் இருவரும் நண்பர்களாயினர். இப்படி பக்திக்காக தன் உயிரையே கொடுக்க முன்வந்தவர் கலிக்காமர்; அவரது மனைவியோ பெண்ணுக்கே அழகு தரும் கூந்தலையே இறைவனுக்கு காணிக்கையாக அளித்தவள். இதன் அடிப்படையிலேயே, முடிகாணிக்கை கொடுக்கும் வழக்கம் பிரபலமானது.