Author Topic: தலை முடி நன்கு வளர  (Read 2569 times)

Offline Global Angel

தலை முடி நன்கு வளர
« on: January 17, 2012, 03:27:58 AM »
தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.

 முருங்கைகீரை சூப் செய்யும் முறை:
 
முருங்கைகீரை - 2 கப்
 வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
 கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
 உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

 முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.
 அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.
                    

Offline RemO

Re: தலை முடி நன்கு வளர
« Reply #1 on: January 17, 2012, 06:38:46 AM »
mudi nangu valarana puthiyathaagava ila iruka mudi neelama valarava

Ithu un sontha anupavama :S

Offline Global Angel

Re: தலை முடி நன்கு வளர
« Reply #2 on: January 19, 2012, 12:54:38 AM »
என் பாட்டியோட அனுபவம் ... உண்மைதான் ரெமோ முருங்கை இலைல இரும்பு சத்து அதிகம் ... தலை முடிக்கு அது தேவை எனவே இது அதுக்கு முக்கியம் விளங்கிச்சா