Author Topic: ~ பூண்டு கஞ்சி ~  (Read 363 times)

Offline MysteRy

~ பூண்டு கஞ்சி ~
« on: March 15, 2016, 10:46:40 PM »
பூண்டு கஞ்சி



பச்சரிசி (அ) புழுங்கலரிசி – அரை கப்
பூண்டு – 15
மிளகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
வெந்தயம் – அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
காய்ச்சிய பால் (அ) தேங்காய்ப் பால் – ஒரு கப்

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பூண்டுப் பற்களை தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியைக் களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
அடுப்பில் ப்ரஷர் பானை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், மிளகு, சீரகம், வெந்தயம் போட்டுப் பொரியவிடவும்.
அத்துடன் பூண்டுப் பற்களைப் போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
பிறகு களைந்து வைத்திருக்கும் அரிசியைச் சேர்க்கவும்.
மிதமான தீயில் வைத்து அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி கிளறிவிடவும்.
பிறகு உப்பு சேர்த்து, அரிசியின் தன்மைக்கு ஏற்ப 3 அல்லது 4 கப் அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் வரவிடவும்.
குக்கர் ஆறியதும் திறந்து வெந்ததை சரிபார்க்கவும்.
வெந்த சாதத்தை மசித்துவிட்டு, அத்துடன் காய்ச்சிய பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து கலந்து பருகலாம். காலை அல்லது மதிய உணவுக்கு சாப்பிட, பொருத்தமான உணவு. கொடுத்திருக்கும் அளவு இரண்டு பேருக்குப் போதுமானது.