Author Topic: சுகமான பாரங்கள்  (Read 370 times)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
சுகமான பாரங்கள்
« on: March 15, 2016, 06:55:07 PM »

சோர்ந்திருக்குமென்னை
கேள்விகளால்
சுளுக்கெடுத்துக்கொண்டிருக்கிறாய் நீ...,

கோழி முட்டைக்கும்
வாத்து முட்டைக்கும்
வித்தியாசம் என்ன என்கிறாய்
கோழி முட்டையிலிருந்து
கோழி வரும்
வாத்து முட்டையிலிருந்து
வாத்து வருமென்கிறேன்

எப்படி வருமென்ற கேள்விக்கு
கோழி முட்டை மேல்
கோழி அமர்ந்தாலும்
வாத்து முட்டை மேல்
வாத்து அமர்ந்தாலும்
வருமென்கிறேன்

யானை முட்டை மேல்
யானை அமர்ந்தால்
நசுங்கி விடாதா என்கிறாய்
யானை குட்டியிடுமென்று
சொல்ல வேண்டுமேயானால்
முட்டையிடாமல் ஏன்
குட்டியிடுகிறதென்னும் உன்
அடுத்த கேள்விக்கு
பதிலளிக்க வேண்டும் நான் ,

�சற்றே சுதாரிக்கிறேன்
நசுங்கிய முட்டைகளிலிருந்து
பன்றிகள் வருகிறது
நசுங்காத முட்டைகளிலிருந்து
யானைகள் வருகிறதென்கிறேன்
கோழி முட்டை நசுங்கினால்
குருவி வருமா என்னும்
உனது குறுக்கு கேள்வி
உலுக்குகிறது கொஞ்சம் என்னை...
சரி தான்
சுகமான பாரங்கள்
ஒருபோதும் நசுக்குவதில்லை தான் ....!
Palm Springs commercial photography