Author Topic: ~ வாழைத்தண்டு பாயசம் ~  (Read 490 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226659
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ வாழைத்தண்டு பாயசம் ~
« on: March 14, 2016, 07:16:33 PM »
வாழைத்தண்டு பாயசம்



தேவையானவை:

 நறுக்கிய வாழைத்தண்டு (நார் நீக்கவும்) - ஒரு கப், சர்க்கரை அல்லது வெல்லம் - 100 கிராம், பால் - அரை கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், நெய் - 100 கிராம், முந்திரி, திராட்சை (சேர்த்து) - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

 வாழைத்தண்டை அரைத்துக்கொள்ளவும். முந்திரி, திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுக்கவும். மீதமுள்ள நெய்யை வாணலியில் விட்டு அரைத்த விழுதை சேர்த்து, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கிளறவும். பிறகு, பால் விட்டுக்கிளறி கொதித்து வரும்போது, தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து... வறுத்த முந்திரி, திராட்சையையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.