Author Topic: ~ உருளைக்கிழங்கு குருமா ~  (Read 383 times)

Online MysteRy

உருளைக்கிழங்கு குருமா



எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
மஞ்சள் பொடி – அரைத் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை- 1 இனுக்கு
கறித்தூள் – 2தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்துமல்லி இலை – சிறிது
உருளைக்கிழங்கு – 4(சுமாரன சைஸ்)
கரம் மாசாலா – 1/2தேக்கரண்டி
அரைத்து கொள்க:
—————–
கசகசா – 1தேக்கரண்டி
சோம்பு – 1/4 தேக்கரண்டி
தனியா தூள்-1 1/2தேக்கரண்டி
தேங்காய் – 3/4 கப்
பொட்டு கடலை – 1/2 கப்

உருளைக்கிழங்கினை அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 பாகங்களாய் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் வெங்காயம்(மெல்லிதாக நீளமாக நறுக்கியது)போட்டு வதக்கவும்.
சிறிது உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
பச்சைமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுது,கறித்தூள்சேர்த்து உப்பு,சிறிது தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்
உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
கரம் மாசாலா,கொத்துமல்லி இலை சேர்த்து 20 secs கழித்து இறக்க வேண்டும்