Author Topic: ~ ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக் ~  (Read 331 times)

Offline MysteRy

ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்



கோடை வந்தாச்சு. வெயிலில் விளையாடி சோர்ந்து போய் வரும் நம் வீட்டுக் குட்டீஸ்க்கும், வியர்வையை வெளியேற்றியே களைப்படைந்து போகும் பெரியவர்களுக்கும் ஏற்ற.. உற்சாகம் தருகிற.. ஜில் மந்திரங்களை இங்கே வழங்கி இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ‘தேவதை’ வாசகியும் சமையல் கலை நிபுணருமான சமந்தகமணி!

அத்திப்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:


காய்ந்த அத்திப் பழம்– (ட்ரை ஃப்ரூட்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும்)- 3, ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, சர்க்கரை – இரண்டு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் – 2 டீஸ்பூன், காய்ச்சிய பால் – ஒரு கப்.

செய்முறை:

அத்திப் பழத்தைப் பாலில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, அதை நன்கு விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கொதிக்க வைத்து ஆற வைக்கவும். ஐஸ்கிரீமை இதன் மேலே வைத்துப் பரிமாறவும்.

***
தர்ப்பூசணி ரசாயணம்
தேவையான பொருட்கள்:


் (இளநீரில்
இருப்பது – பொடிப் பொடியாக நறுக்கவும்) – 1 கப், கெட்டித் தேங்காய்ப் பால் – அரை கப், ஏலக்காய் – ஒன்று, வெல்லம் – அரை கப், உப்பு – ஒரு சிட்டிகை. விருப்பப்பட்டவர்கள், சிறிது சுக்குப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை:

தேங்காய்ப் பாலில் வெல்லத்தைக் கரைய விட்டு அடுப்பில் இளம் சூட்டில் வைத்து சிறிது நேரம் ஆன பின், ஏலக்காய்ப் பொடி போட்டு இறக்கவும். சூடு ஆறியதும்இதனுடன் தர்ப்பூசணி, தேங்காய் வழுக்கை, சுக்குப் பொடி, உப்பு சேர்த்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும் (அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் போதுமானது.)

***
ஆப்பிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்:


நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், சர்க்கரை – இரண்டு டீஸ்பூன், லவங்கப் பட்டைப் பொடி – அரை டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் – ஒரு கப்.

செய்முறை:

ஆப்பிளை சிறிது தண்ணீர் சேர்த்து, சர்க்கரையுடன் நன்றாக அரைத்தெடுக்கவும். மீதமுள்ள தண்ணீரில் இந்த விழுதை நன்கு கலக்கி, ஒரு பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டி, லவங்கப் பட்டைப் பொடியை மேலே தூவி, அலங்கரித்து பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மிளகுப் பொடியையும் தூவலாம்.

***
இளநீர் டிலைட்
தேவையான பொருட்கள்:


பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கல் – அரை கப், ஜிலடின் (உணவுப் பொருட்களில் உபயோகமாகிற ஜிலடின், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன், காய்ச்சின பால் – ஒரு கப், சர்க்கரை, மில்க் மெய்ட், ஃப்ரெஷ் கிரீம் – தலா 2 டீஸ்பூன்.

செய்முறை:

ஜிலடினை சிறிது தண்ணீர் விட்டுக் கரைக்கவும். இதைச் சில வினாடிகள் ஸ்டவ்வில் வைத்துக் கிளறி, ஆற விடவும். பின் இதோடு பால், மில்க் மெய்ட், சர்க்கரை, ஃப்ரெஷ் கிரீம் எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே இளநீர்த் துண்டுகளைச் சேர்த்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து உபயோகிக்கவும்.

***
மேங்கோ லஸ்ஸி

தேவையான பொருட்கள்:


மாம்பழத் துண்டுகள் (நறுக்கியது), தயிர் – தலா அரை கப், ஐஸ் கட்டிகள் – சிறிதளவு, தேன் (அல்லது) சர்க்கரை – 4 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

தயிரை மிக்ஸி அல்லது மத்து கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கட்டிகளையும், உப்பு, மாம்பழத் துண்டுகளையும், தேன் (அல்லது) சர்க்கரையையும் சேர்த்து, நன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்த பின் பரிமாறவும்.

***
தண்டை

தேவையான பொருட்கள்:


பால் – ஒரு கப், கன்டென்ஸ்ட் மில்க் – 2 டீஸ்பூன், பாதாம் பருப்பு – 6, பூசணி விதை, சூரியகாந்தி விதை – தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை, பன்னீர் (ரோஸ் வாட்டர்) – அரை டீஸ்பூன்.

அலங்கரிக்க:

ரோஜா இதழ்கள் – 4 (அல்லது) 5.

செய்முறை:

பாதாம், சூரியகாந்தி விதை, பூசணி விதையை பன்னீருடன் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன், ஏலக்காய்ப் பொடி, பால், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து, நன்கு கலக்கவும். இதனுடன், சிறிதளவு குளிர்ந்த தண்ணீர் அல்லது க்ரஷ்ட் ஐஸ் சேர்த்து, கலக்கி, பரிமாறவும். மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரிக்கவும். (வட இந்திய ஸ்பெஷல் பானம் இது!)

***
மாங்காய் பன்னா

தேவையான பொருட்கள்:


மாங்காய் (துருவியது) – ஒன்று, சர்க்கரை, தண்ணீர் – தலா அரை கப், ப்ளாக் ராக் சால்ட் (இந்துப்பு), மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், சோம்புத் தூள் – ஒரு சிட்டிகை, வறுத்துப் பொடித்த சீரகப் பொடி – சிறிதளவு, க்ரஷ்ட் ஐஸ் – சிறிதளவு.
அலங்கரிக்க: புதினா இலை – சிறிதளவு.

செய்முறை:

மாங்காய், சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும், ஆறிய பின் மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் இதனுடன், ப்ளாக் ராக் சால்ட், மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகப் பொடி சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆறிய பின், க்ரஷ்ட் ஐஸை சேர்த்து, புதினா தூவி அலங்கரித்து பரிமாறவும்.
(இதுவும் வட இந்தியாவின்.. முக்கியமாக, மகாராஷ்ராவின் தயாரிப்பு! அங்கெல்லாம் இதை ‘ஆம் பன்னா’ என்பார்கள். ஆம் – மாங்காய்)

***
தர்ப்பூசணி சிப்
தேவையான பொருட்கள்:


தர்ப்பூசணி ஜுஸ் – ஒரு கப், தயிர் – அரை கப், புதினா விழுது – அரை டீஸ்பூன், தக்காளி ஜுஸ் – அரை கப், மிளகுப் பொடி – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, தேன் – ஒரு டீஸ்பூன், லவங்கப் பட்டை பொடி – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

அரை மணி நேரம் வைத்து, லவங்கப் பட்டை பொடியைத் தூவி, அலங்கரித்துப் பரிமாறவும்.

***
வெள்ளரி ஷேக்
தேவையான பொருட்கள்:


வெள்ளரிக்காய் (துருவியது), பால் – தலா ஒரு கப், தேன் – 2 டீஸ்பூன், சர்க்கரை, நறுக்கிய பாதாம், பாதாம் விழுது – தலா ஒரு டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் – அரை கப்.

செய்முறை:

வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன், சர்க்கரை கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள், 2 டீஸ்பூன் ஐஸ்கிரீமை மேலே வைத்தும் பரிமாறலாம்.
மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்!

***
ரெட் வொண்டர்
தேவையான பொருட்கள்:


கேரட் (பொடியாக நறுக்கியது) – ஒன்று, பீட்ரூட் (பொடியாக நறுக்கியது) – பாதி, தக்காளி (பொடியாக நறுக்கியது) – ஒன்று, ஐஸ் கட்டிகள் – சிறிதளவு, எலுமிச்சம் பழச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க:

புதினா இலைகள்.

செய்முறை:

கேரட், பீட்ரூட், தக்காளி மூன்றையும் தனித் தனியே மிக்ஸியில் அடித்து, சாறு எடுத்து வடிகட்டவும். இதனுடன், எலுமிச்சம் பழச் சாறு, உப்பு, மிளகுத் தூள், ஐஸ் துண்டுகள் சேர்த்து, நன்கு கலந்து, 10 நிமிடங்கள் வைத்து, புதினாவை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.
(கேரட், பீட்ரூட், தக்காளி என்று சிவப்பு நிறப் பொருட்களே கலந்திருப்பதால், இதற்கு இந்தப் பெயர்.)