Author Topic: ~ முட்டை தக்காளி புட்டு ~  (Read 395 times)

Offline MysteRy

முட்டை தக்காளி புட்டு



முட்டை – 2
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று (பெரியது)
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
தனியா தூள் – இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
பூண்டு – 5
கறிவேப்பிலை – 7
உப்பு – தேவையான அளவு

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பூண்டு போட்டு வதக்கவும்.
இவற்றுடன் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்த மசாலா கலவையுடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து பிரட்டி விடவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்கு வதங்கியதும் அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி நன்கு பிரட்டவும்.
முட்டையுடன் சேர்ந்த தக்காளி கலவையை நன்கு பிரட்டி விட்டு 5 நிமிடம் அடுப்பில் வைத்திருந்து பின்னர் இறக்கவும்.
சுவையான முட்டை தக்காளி புட்டு ரெடி. இதனை சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.