Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நீங்கள் பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்தல் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ நீங்கள் பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்தல் ~ (Read 379 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226728
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ நீங்கள் பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்தல் ~
«
on:
March 10, 2016, 01:56:00 PM »
நீங்கள் பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்தல்
நீங்கள் பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கிறீர்களா? அதற்கு இதுவரை தீர்வு கிடைக்காமல் அலைபவரா? அப்படியெனில், இக்கட்டுரை உங்களுக்கானது.
ஏனெனில், இங்கு மருத்துவ குணம் அதிகம் நிறைந்த ஒரு பொருளான இஞ்சியைக் கொண்டு எப்படி தலைமுடி பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இஞ்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
முன்பெல்லாம் தலைமுடியின் வளர்ச்சிக்கு இஞ்சியைப் பயன்படுத்தி வந்தார்கள்.
மேலும் ஆயுர்வேதம் கூட தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியைப் பரிந்துரைக்கிறது. சரி, இப்போது இஞ்சி எப்படி நம் தலைமுடி பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது என்பது குறித்து விரிவாகக் காண்போம்.
சத்துக்கள் :
இஞ்சியின் வேரில் முடியின் வலிமை, ஆரோக்கியம் மற்றும் மென்மையை அதிகரிக்கும் சத்துக்களான மக்னீசியம், பொஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் விற்றமின்கள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளன.
முடி உதிர்தல் :
இஞ்சி முடியின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிப்பதோடு, முடி உதிரும் பிரச்சினை இருந்தாலும், அதனை சரிசெய்து, மயிர்க் கால்களை வலிமையாக்கும்.
பொடுகுத் தொல்லை பொடுகுத் தொல்லையால் பெரும்பாலான மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
அவர்கள் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாற்றினை 1 டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் ஸ்கல்ப்பில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் பொடுகுத் தொல்லை அகலும்.
முடியின் வளர்ச்சி :
உங்களுக்கு நீளமான முடி வேண்டுமானால், இஞ்சியைப் பயன்படுத்துங்கள். இஞ்சியில் உள்ள பொருட்கள் ஸ்கல்ப்பை ஆரோக்கியமாக வைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்
இரத்தோட்டம் மேம்படும் :
இஞ்சியைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
ஃபேட்டி அசிட் :
இஞ்சியில் ஃபேட்டி அசிட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன.இது முடி உதிர்வதைக் குறைத்து, தலைமுடி மெலிவதைத் தடுக்கும்.
இஞ்சி சாறு மற்றும் ரோஸ் வோட்டர் :
இஞ்சி சாற்றினை ரோஸ் வோட்டருடன் சேர்த்து கலந்து, ஸ்கல்ப்பில் தடவி ஊற வைத்து அலசினால், பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு :
இஞ்சி சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, அதனை தலையில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து உடனே அலசி விட வேண்டும். இல்லாவிட்டால், அவை ஸ்கல்ப்பை பெரிதும் பாதித்துவிடும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நீங்கள் பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்தல் ~