Author Topic: ~ சின்ன வெங்காயம் பூண்டு கார சட்னி ~  (Read 320 times)

Offline MysteRy

சின்ன வெங்காயம் பூண்டு கார சட்னி



தேவையான பொருட்கள்:

1.சின்ன வெங்காயம் பத்து.
2.பூண்டு மூன்று பல்.
3.சிறிய தக்காளி ஒன்று.
4.புளி சிறிய கொட்டை பாக்கு அளவு.
5.காய்ந்த மிளகாய் ஐந்து.
6.உப்பு தேவையான அளவு.
7.கடுகு சிறிதளவு.
8.கறிவேப்பிலை ஒரு கொத்து.
9.நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி.

செய்முறை:

மிக்ஸியில் காய்ந்தமிளகாய்,சின்னவெங்காயம்,பூண்டு,புளி,தக்காளி,உப்புஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைக்கவும்.அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து கொட்டி கலக்கி பரிமாறவும்.
குறிப்பு:
இந்த சட்னி இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.சட்னியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடவும்