Author Topic: ~ விஷமாகும் உணவுகள்! ஆபத்துகள் தெரியுமா? ~  (Read 435 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226728
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
விஷமாகும் உணவுகள்! ஆபத்துகள் தெரியுமா?



கலர் கலரான பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் உணவு கொண்டு செல்ல குழந்தைகள் ஆசைப்படுவார்கள்.
ஏனெனில் விதவிதமான டிசைன், வண்ணக்கலர்கள் என குழந்தைகளை இந்த பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்கள் வசீகரிக்கும்.
பெற்றோர்களும், தங்கள் பிள்ளைகளின் ஆசைப்படியே நடந்துகொள்வர், சிறியவர் மட்டுமல்ல, இளைஞர்கள் மற்றும் பெரியோர் அனைவருமே கல்லூரி, அலுவலகத்திற்கு இந்த கலர்புல் டிபன்பாக்ஸையே கொண்டு செல்கின்றனர்.

ஆனால், இதன் விபரீதம் தெரியுமா உங்களுக்கு,
கடைகளில் குறைந்த விலை பிளாஸ்டிக் டப்பாக்கள் நிறைய வந்துவிட்டன. இவை எல்லாம் தரமானது என கூற முடியாது.
பொதுவாக, பிளாஸ்டிக்குகளில் இருந்து, பி.பி.ஏ (பிஸ்பீனல்-ஏ- bisphenol-a) எனப்படும் வேதிப்பொருள் உருவாகும்.
இது, ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தும். நரம்பு சார்ந்த பிரச்னைகளை உருவாக்கும்.
தொடர்ந்து பயன்படுத்துவதால், எடை கூடும், நீரிழிவு பாதிப்பு வரும். குறைந்த வயதிலேயே, பெண்கள் பூப்பெய்தி விடவும் வாய்ப்புள்ளது.
‘பெட்’ (பாலி எத்திலின் டேரப்தலேட்) பாட்டில் என்கிறோம். இதில், டை- எத்தில் – ஹைட்ரக்சில் அமைன்(டேகா) என்ற ரசாயனப் பொருள் கலந்துள்ளது.
இது புற்றுநோய்க்கான வேதிப்பொருள். பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாலும், வெந்நீரை ஊற்றி வைத்து பருகுவதாலும், ‘டோகா’ தண்ணீரில் கலந்து, உடலுக்குள் செல்கிறது.

இதுவும் ஆபத்தான ஒன்று, பி.பி.ஏ பாதிப்பு இல்லாத, உணவுப் பொருட்களை வைத்தால், சூடாகாத பிளாஸ்டிக் டப்பாக்கள்(புட் கிரேடு) பயன்படுத்த வேண்டும்.
டப்பா, பாட்டில்கள் வாங்கும்போது இதுபற்றிய குறிப்புகள் உள்ளதா என பார்த்து, தரமானதாக வாங்க வேண்டும்.