Author Topic: ~ உங்க கையும், காலும் கருப்பா இருக்கா? அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்! ~  (Read 620 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226728
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உங்க கையும், காலும் கருப்பா இருக்கா? அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்!



அழகு பராமரிப்பு என்று வரும் போது முகத்திற்கு தான் அதிக அக்கறை காட்டுவோம். ஆனால் முகம் மட்டும் பளிச்சென்று இருந்து, கை, கால்கள் கருமையாக இருந்தால் நன்றாக இருக்குமா என்ன? அதிலும் தற்போது அடிக்கும் வெயிலில் சிறிது நேரம் நடத்தாலே சரும நிறம் மாற ஆரம்பிக்கும் அளவில் வெயில் கொளுத்துகிறது. எனவே உங்கள் அழகு மேம்பட வேண்டுமானால், கை, கால்களுக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். இங்கு கை மற்றும் கால்களில் உள்ள கருமையைப் போக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், கை மற்றும் கால்களில் உள்ள கருமையை விரைவில் போக்கலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் தேன் வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, கை மற்றும் கால்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உங்கள் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நீங்கும்.

இளநீர் இளநீர் கூட கை, கால்களை வெள்ளையாக்க உதவும். அதற்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது தினமும் இளநீரை கைகளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சீக்கிரம் கருமை நீங்கும்.

எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் எலுமிச்சை சாற்றினை வெள்ளரிக்காய் சாற்றுடன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி ஊற வைத்து கழுவ, அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் சருமத்தில் உள்ள கருமை மறையும்.

தக்காளி தக்காளியை அரைத்து அதனை கை, கால்களில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், சரும நிறத்தை மேம்படுத்தலாம்.

முட்டை வெள்ளைக்கரு உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்துங்கள். அதுவும் வாரத்திற்கு 2 முறை முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை விரைவில் அகலும்.

ஓட்ஸ் மற்றும் தயிர் ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தயிர் மற்றும் தக்காளி சாறு சேர்த்து கலந்து, கை, கால்களுக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ, கை, கால்களில் உள்ள கருமை நீங்கும் மற்றும் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் போய்விடும்.