Author Topic: ~ ஈஸி கிட்ஸ் வெஜ் புலாவ் ~  (Read 497 times)

Offline MysteRy

ஈஸி கிட்ஸ் வெஜ் புலாவ்



பாஸ்மதி அரிசி – 2 கப்
நறுக்கின பீன்ஸ், சோளம், காரட் – ஒரு கப்
வெங்காயத்தாள் – 5
எலுமிச்சை – ஒன்று
நெய் – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
புதினா இலை – 6
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு

வெங்காயத்தாளை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும். மற்ற பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்தவும்.
எண்ணெய் சூடானதும் அதில் 2 தேக்கரண்டி சீரகத்தை போட்டு பொரிய விடவும்.
சீரகம் பொரிந்ததும் துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தாளை போட்டு வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள காரட், பீன்ஸ், சோளம் ஆகியவற்றை போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கி அப்படியே வேக விடவும்.
காய்கறிகள் நன்கு வெந்தவுடன் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை எடுத்து தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு காய்கறி கலவையுடன் போட்டு கிளறவும்.
இந்த கலவையுடன் நெய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்
பின்னர் அந்த கலவையை ஒரு முறை நன்கு கிளறி விட்டு எடுத்து ரைஸ் குக்கரில் போட்டு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 15 நிமிடம் கழித்து வெந்ததும் திறந்து எடுத்து மேலே கொத்தமல்லி தழையை தூவவும்.
இப்பொழுது சுவையான ஈஸி கிட்ஸ் வெஜ் புலாவ் ரெடி. இதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும். இதில் மிளகாய் மற்றும் மிளகாய் தூள் இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.