Author Topic: ~ மாங்காய் தொக்கு ~  (Read 348 times)

Offline MysteRy

~ மாங்காய் தொக்கு ~
« on: March 05, 2016, 06:16:30 PM »
மாங்காய் தொக்கு



சின்ன நீல மாங்காய் – 2
கடுகு – முக்கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் – கால் தேக்கரண்டி
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
சீனி – 2 தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி + கால் தேக்கரண்டி

மாங்காயை தோல் சீவி, சீவல்களாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பெருங்காயத் தூள், நறுக்கி வைத்திருக்கும் மாங்காய் போட்டு நன்கு பிரட்டவும்.
பிரட்டிய பிறகு ஒரு தட்டை வைத்து மூடி விடவும். 5 நிமிடம் கழித்து திறந்து, பிரட்டி விட்டு மீண்டும் மூடி விடவும்.
மீண்டும் 2 நிமிடம் கழித்து திறந்து ஒரு நிமிடம் பிரட்டவும். அதன் பிறகு உப்பு மற்றும் சீனி போட்டு பிரட்டி விடவும்.
சீனி, உப்பு இரண்டும் மாங்காயில் ஒன்றாக சேர்ந்து மாங்காய் வெந்த பதத்துக்கு வந்ததும், மிளகாய் தூள் போட்டு 3 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பிறகு 2 நிமிடம் கழித்து மிளகாய் வாசனை போனதும் மாங்காய் தொக்கில் இருந்து எண்ணெய் வெளியே வரும். அந்த நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.
இந்த மாங்காய் தொக்கை கை படாமல் ஒரு பாட்டிலில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். மோர் சாதத்துக்கு மிகவும் பொருத்தமான பக்க உணவு.