Author Topic: ~ திராட்சை வைன் ~  (Read 355 times)

Offline MysteRy

~ திராட்சை வைன் ~
« on: March 05, 2016, 10:07:05 AM »
திராட்சை வைன்



தேவையான பொருட்கள்:-

திராட்சை – 5 கிலோ
சுடுதண்ணீர் – 6 1/2 லிட்டர்
சீனி – 6 1/2 கிலோ
ஈஸ்ட்தேவைக்கு ஏற்ப
முளை கட்டிய கோதுமை தேவைக்கு ஏற்ப

செயல் முறை:

6 1/2 லிட்டர் தண்ணீரை சுடாக்க வேண்டும்.
திராட்சைப் பழத்தினை நன்கு கழுவி சுத்தமான மெல்லிய துணியில் , ஈரம் நீக்கி துடைக்கவும்.
ஒரு ஜாடியை சுத்தப்படுத்தி நன்கு உலர்ந்த திராட்சை பழத்தை அதனுள் போட்டு மத்து வைத்து நன்கு நசுக்கி விடவேண்டும்.
அதில் ஆற வைத்த தண்ணீறையும், சினியையும் ஒரு துணியில பட்டை கிரம்பு சிறு பொட்டலமாக கட்டி போடவும்.
நான்கு நாள் கழித்து ஈஸ்ட் சேர்க்கவும்.
முளை கட்டிய கோதுமை சிறிதளவு சேர்க்கவும்.
திரும்பவும் மத்து போட்டு கிளறவும்.
30 நாட்கள் கழித்து மிண்டும் கிளறவும்.
45 நாட்கள் கழித்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றவும்.