Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ சிவப்பு உணவுகளை அன்றாடம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ சிவப்பு உணவுகளை அன்றாடம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்! ~ (Read 356 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226729
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ சிவப்பு உணவுகளை அன்றாடம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்! ~
«
on:
March 04, 2016, 10:30:17 PM »
சிவப்பு உணவுகளை அன்றாடம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!
வண்ணத்தில் மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்கும் கூட நல்ல ஈர்ப்பு கொண்டது தான் சிவப்பு. சிவப்பு உணவுகளான ஆப்பிள், தக்காளி, மாதுளை, பீட்ரூட், பன்னீர், திராட்சை, செர்ரி, தர்பூசணி, சிவப்பு மிளகாய், குருதிநெல்லி போன்றவற்றில் நமது உடலுக்கு தேவையான அன்றாட சத்துக்கள் நிறைய இருக்கின்றன. வெள்ளை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்! சிவப்பு உணவுகளினால் நீரிழவு, இரத்த அழுத்தம், இவற்றின் காரணங்களால் ஏற்படும் மற்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படாமல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்....
ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிள் மருத்துவரிடம் செல்லாமல் இருக்க உதவும் என்பார்கள். இதில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ், ஃபிளாவனாய்டுகள், நார்ச்சத்து போன்றவை நீரிழிவு, நுரையீரல், பெருங்குடல், மார்பக, கல்லீரல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மேலும் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் பயனளிக்கிறது.
தக்காளி தக்காளியில் வைட்டமின் சி, ஈ, கே, எ சத்துக்களும், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம் போன்றவை உயர்ரக அளவில் கிடைக்கிறது. தக்காளி சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள, இதய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
மாதுளை இதில் அதிகளவில் ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றன. மேலும் மாதுளையில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதய நோயை எதிர்த்து போராடும் தன்மையுள்ளவை. ஆண்மை குறைபாடு உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் போன்றவர்கள் மாதுளையை உட்கொள்வதால் சிறந்த தீர்வுக் காண முடியும்.
செர்ரி செர்ரியில் அந்தொசியனின் (anthocyanin) எனும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளது. இது கீல்வாதம், நீரிழிவு புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்து போராட நன்கு உதவுகிறது. செர்ரிகளில் பொட்டாசியம், வைட்டமின் எ, நார்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன.
தர்பூசணி உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க உதவும் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்று. வைட்டமின் எ, பி 6, சி மற்றும் அமினோ அமிலம் சத்து போன்றவை இதில் அதிகம். தர்பூசணியில் இருக்கும் லைகோபீன் எனும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதய நோய்கள் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
சிவப்பு மிளகாய் சிவப்பு மிளகாயில் கேப்சாய்சின் எனும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது, இது இரத்த நாளங்களை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், இது பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் ஃபோலேட் / ஃபோலிக் அமிலம் பெண்களின் இதயத்திற்கு நலன் சேர்க்கிறது.
குருதிநெல்லி (Cranberry) இதில் அல்சரை உண்டாகும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உள்ளது. மேலும், இந்த குருதிநெல்லி சிறுநீர் குழாய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ சிவப்பு உணவுகளை அன்றாடம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்! ~