Author Topic: ~ மோதகம் ~  (Read 365 times)

Online MysteRy

~ மோதகம் ~
« on: February 28, 2016, 10:45:08 PM »
மோதகம்



அரிசி மாவு-4கப்
கடலைப் பருப்பு-21/2கப்
வெல்லம்- அரைக் கிலோ
தேங்காய்த் துருவல்- 21 /2கப்
ஏலக்காய், முந்திரி, கிஸ்மிஸ்- தேவையானஅளவு
உப்பு-ஒரு தேக்கரண்

செய்முறை:

கடலைப் பருப்பினை சுமார் ஒரு மணிநேரம் ஊறவிடவும். ஊறிய பருப்பை குழைய வேக வைத்து நீரை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் போட்டு, கைகளால் அழுத்தி பிசையவும். பருப்பு ஒன்றிரண்டாக நசுங்கி, அரைத்தது போல் வரவேண்டும். இத்துடன் வெல்லத்தைப் போட்டு நன்கு தட்டவும். பிறகு துருவியத் தேங்காயை வெறும் வாணலியில் போட்டு லேசாக சிவக்க வதக்கி எடுத்து, இதோடு சேர்க்கவும். ஏலக்காய், வறுத்த முந்திரி, பொரித்த கிஸ்மிஸ் எடுத்து பூரணத்தோடு சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.
அரிசிமாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு மேசைக்கரண்டி உப்பு போட்டு வேக வைக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவினை போட்டு, அதில் இரண்டு கப் சுடு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியின் பின்புறத்தைக் கொண்டு அழுத்திக் கிளறி விடவும். பிறகு மீதமிருக்கும் தண்ணீரையும் அளவாக ஊற்றி, கைகளால் பிசைந்து, மாவு மிருதுவாக இருக்குமாறு செய்யவும். எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உள்ளங்கையில் வைத்து சற்று தட்டையாக தட்டிக்கொள்ளவும். பிறகு கைகளால் அழுத்தி அதனைக் கிண்ணம்போல் செய்யவும். அதனுள்ளே சிறிது பூரணத்தை வைக்கவும். பின்னர் அதன் ஓரங்களை, விரும்பிய வடிவில் அழகாக ஒரே அளவாக மூடவும். இப்படி பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை, இட்லி தட்டில் அடுக்கி, பானையில் வைத்து வேக விடவும். 15 நிமிடம் கழித்து வெந்தவுடன் எடுத்தால் சுவையான, சத்துநிறைந்த கொழுக்கட்டை ரெடி.