Author Topic: ~ சாமை காய்கறி பிரியாணி ~  (Read 384 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226723
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ சாமை காய்கறி பிரியாணி ~
« on: February 27, 2016, 09:05:31 PM »
சாமை காய்கறி பிரியாணி



தேவையான பொருட்கள்:

சாமை அரிசி – 500 கிராம்,
வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ – தலா 100 கிராம் (நறுக்கியது),
பச்சைப்பட்டாணி – 50 கிராம்,
தயிர் – அரை கோப்பை,
இஞ்சி, பூண்டு விழுது, புதினா – தேவையான அளவு,
சோம்பு, பட்டைப்பொடி – 2 மேசைக்கரண்டி,
மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

நெய்,
ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு – தலா 2,
பட்டை, சாதிபத்திரி – சிறிதளவு.

செய்முறை:

• புதினாவை இலைகளை மட்டும் தனியாக எடுத்து நன்றாக கழுவி வைக்கவும்.
• நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை, சிவக்க வறுத்துக்கொள்ளவும். இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
• பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, புதினாவைச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த் தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் தயிர் சேர்த்து வேகவிடவும்.
• சாமை அரிசியைச் சேர்த்து வேகவிடவும். பிரியாணி பதம் வந்ததும் எடுக்கவும்.
மேலும் சமையல் குறிப்புகள் இங்கே கிளிக் செய்யவும்
தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
பிடித்தால் அனைவருடனும் பகிருங்கள்
விஜய்தமிழ்.NeT
பலன்கள்: அனைத்துக் காய்கறிகளும் சேர்வதால், எல்லாச் சத்துக்களும் கிடைக்கின்றன. அதனுடன் சாமை சேர்வதால், நார்ச்சத்தும் கிடைத்து, உடல் வலுவைக் கூட்டுகிறது. காய்கறிகள், பட்டாணி சேர்ப்பதால், ஆரோக்கியம் கூடுகிறது.