புதுக் கவிதை
வானப்
பொன் ஏட்டில்
இயற்கை எழுதிவைத்த
ஆயிரமாயிரம்
நட்சத்திர அய்க்கூ கவிதைகளுக்கு
இடையில்
என்னவளைப் போலவே
அழகாய் மிக அழகாய்
ஒரேயொரு புதுக் கவிதை
நிலவு
அம்மா
முதல் நாள்
தியான வகுப்பில்
கண்களை மூடிக்கொண்டு
இரு புருவங்களுக்கும் மத்தியில்
ஒரு கடவுளை நிறுத்தச் சொன்னார்
ஆசிரியர்
சட்டென்று மின்னலாய்
இன்று வரை வந்து நிற்பது
உன்முகம் தான்
அம்மா
கவிதைகள்
உணர்ச்சியின் உஷ்ணத்தில்
உதிரும் பொறிகள்
சிந்தையெனும் சிப்பிக்குள்
மூடிவத்த முத்துக்கள்
கற்பனையின் கர்ப்பத்தில்
பிறக்கும் குழந்தைகள்
பேப்பருக்கு பேனா இடும்
முத்தங்கள்
புன்னகை
செய்கூலி இல்லை
சேதாரம் இல்லை
சிரித்துப் பாருங்கள்
செலவேதும் இல்லை